Breaking News

இன்றைய காலம் சர்ச்சைக்குரிய சூழலாகவே உள்ளது - சி.சிறிதரன்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மக்­களின் எண்­ணங்கள் சிந்­த­னை­களின் அடிப்­ப­டை­யிலே பய­ணிக்கும். இதில் இருந்து மாறாது. ஆனால் இன்­றைய காலம் சர்ச்­சைக்­கு­ரிய சூழ­லாக இருக்­கி­றது. எனவே நாம் நிதா­ன­மாக, தெளி­வான பாதையில் பய­ணிக்­க­ வேண்டுமென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.சிறி­தரன் தெரி­வித்தார்.

இலங்கை முத­லு­தவிச் சங்க தொண்­டர்­க­ளுக்­கான சான்­றிதழ் வழங்கும் நிகழ்வும் சின்­னம்­சூட்டும் நிகழ்வும் நேற்று முன்­தினம் தொண்­ட­ம­னாறு கிராம அபி­வி­ருத்திச் சங்­கத்தில் நடை­பெற்­ற­போது உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்,

இன்­றைய கால­கட்டம் ஒரு நெருக்­க­டி­யாக ஒரு சர்ச்­சைக்­கு­ரிய கால­மாக இருக்­கி­றது. மக்கள் தெ ளிவாக இருக்­க­வேண்டும். தெளிவு தான் மிக முக்­கி­ய­மா­னது. ஒரு வழிப்­பா­தையில் இருந்து நாங்கள் மாறாது ஒற்­று­மை­யாக ஒரே பாதையில் பயணம் செய்­ய­வேண்டும்.

தற்­போது பல­வி­த­மான சந்­தே­கங்கள் இருக்­கின்­றன. வடக்கு, கிழக்கு இணைக்­கப்­ப­டுமா? தமி­ழ் மக்­க­ளுக்கு நீதி­யான தீர்வு கிடைக்­குமா? தமிழ் மக்கள் விரும்­பு­கின்ற காணி, பொலிஸ் அதி­காரம் கிடைக்­குமா? ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தமிழ் மக்கள் நம்­ப­லாமா என்ற சந்­தே­கங்கள் நில­வு­கின்­றன. இந்த சந்­தே­கங்கள் மக்­களைக் குழப்ப நிலைக்குத் தள்­ளி­யுள்­ளது. இந்த குழப்­ப­நிலைக்குள் இருந்து விடு­பட்டு நாங்கள் எங்­களை இழக்­காமல் இருக்­க­வேண்டும்.

ஒரு சங்­கத்தில் ஒற்­று­மை­யாக இருப்­பது என்றால் பணிக்­காக, சேவைக்­காக ஒரு­மித்து நிற்­கி­றீர்கள். அதேபோல் தான் நாங்­களும் மக்­க­ளுக்­காக மக்­களின் ஆணை­க­ளுடன் புறப்­ப­டும்­போது அவர்­க­ளு­டைய எண்ணங்­க­ளுக்கு சிந்­த­னைக்கு பாதகம் ஏற்­ப­டாத வகையில் நடக்­க­வேண்­டிய கடமை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு இருக்­கின்­றது.

வடக்கு, கிழக்கு இணைந்து நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய சர்­வ­தேச அங்­கீ­காரம் பெற்ற சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான தீர்வை அரசு முன்­வைக்கும் போதுதான் அதனை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஏற்றுக் கொள்ளும். அதில் மக்­களும் தெ ளிவாக உள்­ளனர்.

எங்­க­ளு­டைய தேசம் சார்ந்த சுய­நிர்­ணய உரி­மையை அடிப்­ப­டை­யாக வைத்து நாங்கள் எங்­களை ஆளு­கின்ற சுயாட்­சியைப் பெறு­கின்ற வகையில் வடக்கு கிழக்கு இணைந்த பொலிஸ், காணி, நிதி அதி­காரம் கொண்ட எங்கள் பிர­தே­சங்­களை அபி­வி­ருத்தி செய்யும் ஆட்­சி­முறை எமக்கு வேண்டும்.

வடக்கு, கிழக்கில் இணைந்த எங்­க­ளுடைய மண்ணில் நிரந்­த­ர­மான கெள­ர­வ­மான அர­சியல் தீர்வை சிங்­கள அர­சியல் தலை­மைகள் தங்­க­ளு­டைய இடர்­பா­டுகள் இன­வா­தங்­களை கைவிட்டு வழங்­கும்­போது நாங்கள் மன்­னிப்புக் கொடுப்­பது என்­பது அதற்கு பிற்­பாடு உள்ள விடயம்.

அதற்கு முன்பு எங்­களை மன்­னி­யுங்கள். உங்­க­ளுக்கு தீர்வைத் தர­மு­டி­யாது என்­கின்ற விட­யங்­களை நாங்கள் நம்­ப­மு­டி­யாது. இத­னால்தான் நாங்கள் மிக நெருக்­க­டி­யான கால­மாக இதைப் பார்க்­க­வேண்டும்.

ஆகவே, நாங்கள் ஒரு பல­மாக தெ ளிவான பாதையில் பய­ணிக்க வேண்டும். நாங்கள் நம்­ப­மு­டி­யாத தலை­வர்கள் தான் இன்று சிங்­கள அர­சியல் தலை­மையில் இருக்­கின்­றார்கள். அவர்கள் எங்­க­ளு­டைய சூழலை அவதானமாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழர்களை எவ்வாறு சின்னாபின்ன மாக்குவது புலம் பெயர் தமிழர்களை சிதைப்பதை எமது பேரம் பேசும் சக்தியை உழைப்பதை அவதானிக்கிறார்கள். இவற்றையெல்லாம் அவதானித்து நாம் ஒருமித்து ஒரே பாதையில் பயணிக்க வேண்டும் என்றார்.