Breaking News

ஜெயகுமாரி உள்ளிட்ட சந்தேக நபர்களின் உடமைகளை விடுக்க உத்தரவு!

பாலந்திரன் ஜெயகுமாரி உள்ளிட்ட சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 9 பேரின் உடமைகள் விசாரணைக்குத் தேவை இல்லையெனில் அவற்றை விடுவிக்குமாறு கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலந்திரன் ஜெயகுமாரி உள்ளிட்டவர்களின் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லையென மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார்.

அத்துடன், சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்ட போது அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட உடமைகளை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மீள கையளிக்காதுள்ளதாகவும் சட்டத்ததரணி சுட்டிக்காட்டினார்.தேசிய அடையாள அட்டை, கையடக்கத் தொலைபேசி, மடிக்கணனிகள் போன்ற உடமைகளை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனைக் கருத்திற்கொண்ட நீதவான், விசாரணைகளுக்கு குறித்த உடமைகள் தேவையில்லையெனில் அவற்றை மீள ஒப்படைக்குமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.