Breaking News

போர்க்குற்ற விசாரணைகள் குறித்த கலந்தாலோசனை ஜனவரி மாதத்தில் - ஹர்ச டி சில்வா தெரிவிப்பு



போர்க்­குற்ற விசா­ர­ணைகள் தொடர்­பி­லான கலந்­தா­லோ­சனை ஜன­வ­ரி மாதத்தில் மேற்­கொள்­ளப்­படும். பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் நாம் பின்­னிற்­கப்­போ­வ­தில்லை என அர­சாங்கம் தெரி­வித்­துள்ளது. ஜெனிவா கூட்டத்தொடருக்கு முகம்­கொ­டுக்­க­கூ­டிய வகையில் செயற்­பா­டு­களை கையாண்­டுள்­ள­தா­கவும் அரசாங்கம் குறிப்­பிட்­டது.

போர்க்­குற்றம் உள்­ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்­பி­லான பொறுப்புக் கூறல் விட­யத்தில் அர­சாங்கம் உறு­தி­யான பொறி­மு­றை­களை கையா­ளாத நிலையில் எதிர்­வரும் ஜூன் மாதம் ஐ.நா.மனித உரிமைப் பேர­வையின் கூட்டத்தொடரின்போது இலங்கை விவ­கா­ரங்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள நிலையில் இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட வெளி­வி­வ­கார பிரதி அமைச்சர் ஹர்­சடி சில்வா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறு­கையில்,

இலங்கை மீதான சர்­வ­தேச தாக்கம் கடந்த காலத்தில் எவ்­வாறு இருந்­தது என்­பது குறித்து புதி­தாக கூற வேண்­டிய தேவை இல்லை. யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர் கடந்த ஐந்து ஆண்­டு­களின் முன்­னைய அர­சாங்கம் பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் மிகவும் மோச­மான வகையில் செயற்­பட்­டது.

அதேபோல் யுத்­தத்தின் போது எவ்­வாறு மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றதோ அதேபோல் யுத்தம் முடி­வ­டைந்து ஐந்து ஆண்­டு­க­ளிலும் ஜன­நா­யக செயற்­பா­டு­க­ளுக்கு பாரிய அச்­சு­றுத்தல் நிலைமை காணப்­பட்­டது. இதேபோல் கடந்­த­கால குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் ஆராய முன்னர் யுத்­தத்தின் பின்­ன­ரான மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்கும் பொறி­முறை ஒன்றை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என்ற நிலைப்­பாடு இருந்­தது. அவ்­வாறு இருக்­கையில் கடந்த ஜன­வரி மாத ஆட்சி மாற்­ற­மா­னது ஜன­நா­ய­கத்தை வென்­றெ­டுக்கும் வகையில் அமைந்­துள்­ளது.

அதேபோல் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் நாம் எதிர்­கொண்ட ஐ.நா. மனித உரி­மைபேர­வையின் கூட்­டத்­தொ­ட­ரையும் வெற்­றி­க­ர­மாக முகம்­கொ­டுக்க முடிந்­தது. கடந்த காலத்தில் எம்­மீது முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுகள் அனைத்­தையும் விசா­ர­ணைகள் மூல­மாக தெளி­வு­ப­டுத்தும் ஒரு பொறி­மு­றையை கையா­ள­வேண்­டிய கட்­டா­யமும் அர­சாங்­கத்­திற்கு உள்­ளது. எனினும் முன்­னைய அர­சாங்கம் விசா­ரணைப் பொறி­மு­றையை கையாள்­வதில் தயங்­கி­ய­மையும், உண்­மை­களை மூடி­ம­றைக்க முயன்­ற­மை­யுமே நாட்­டிற்கு எதி­ரான அழுத்­தங்கள் மேலும் அதி­க­ரிக்க காரணமாக அமைந்தன.

எனினும் ஐக்­கிய நாடுகள் சபையின் பிரே­ர­ணையை நாம் ஏற்­றுக்­கொண்­டுள்­ள­துடன் உள்­ளக பொறி­மு­றை­களின் விதி­மு­றைக்கு அமைய கலப்பு விசா­ரணை முறைமை ஒன்றை கையாள்­வ­தா­கவும் அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

அதற்­க­மைய நாம் எமது நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். குறிப்­பாக காணா­மல்­போ­னோரை கண்­ட­றியும் ஆணைக்­குழு மூல­மாக உண்­மை­யான வாக்­கு­ மூ­லங்­க­ளையும், சரி­யான தக­வல்­க­ளையும் பெற்று வரு­கின்றோம். அதேபோல் வடக்­கிலும் கிழக்­கிலும் மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். மக்­களின் அடிப்­படை பிரச்­ச­னைக்­கான தீர்வை அர­சாங்கம் வழங்கி வரு­கின்­றது. தமிழ் மக்­களின் வாழ்­வா­தார மற்றும் அடிப்­படை பிரச்­சி­னைக்கு தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

அதேபோல் போர்க்­குற்ற விசா­ர­ணைகள் தொடர்பில் எவ்­வா­றான பொறி­மு­றை­களை கையாள்­வது என்­பது தொடர்­பி­லான கலந்­தா­லோ­ச­னைகள் எதிர்­வரும் ஜன­வரி மாதம் ஆரம்­ப­மாகும். ஜன­வ­ரியில் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் தலை­மையில் முக்­கிய கலந்­து­ரை­யா­டல்கள் மேற்­கொள்­ளப்­பட்டு மார்ச் மாதத்­தினுள் எவ்­வாறு விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­பது என்­பது தொடர்பில் தீர்வு எட்­டப்­படும்.

போர்க்­குற்ற விசா­ர­ணைகள் தொடர்பிலான பொறிமுறைகள் துரிதமாக கையாளப்பட்டு வருகின்றது. ஆனால் யாரையும் திருப்திப்படுத்த பக்கசார்பான நடவடிக்கைகள் எவற்றையும் முன்னெடுக்க முடியாது. ஆகவே பொறுப்புக்கூரல் தொடர்பில் அரசாங்கம் சரியாக கையாளும். அதேபோல் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் முகம்கொடுக்கக்கூடிய வகையில் இப்போதே செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.