பட்டதாரிகளின் போராட்டம் மீண்டும் ஆரம்பம்?
அரசாங்க அதிகாரிகளுடன் இடம் பெறவுள்ள கலந்துரையாடலில் உரிய தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் தொடர் போராட்டங்களை நடத்தவுள்ளதாக ஒன்றிணைந்த தொழிலற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி இடம் பெற்ற கலந்துரையாடலின் பின்னர், தொழிலற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்ப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது.
குறித்த குழு தொழிலற்ற பட்டதாரிகள் சங்கத்துடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளது.இதன்போது, தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கபெறாத பட்சத்தில் மீண்டும் தொடர் எதிர்ப்புக்களில் ஈடுபடவுள்ளதாக தொழிலற்ற பட்டதாரிகள் சங்க அழைப்பாளர் டம்மிக முனசிங்க தெரிவித்துள்ளார்.