Breaking News

முல்லைத்தீவில் பலப்படுத்தப்படும் இராணுவ முகாம்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொது மக்களின் காணிகளில் உள்ள இராணுவமுகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப் டுகின்றது.

மல்லாவி, கொக்காவில், மாங்குளம், ஒட்டுசுட்டான், கேப்பாபுலவு, மன்ன கண்டல் புதுக்குடயிருப்பு, சுதந்திரபுரம் உள்ளிட்ட பல இராணுவ முகாம்களை பலப்படுத்தி நிரந்தர முகாம்களாக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சுதந்திரபுரத்தில் இலங்கை பீரங்கிப் படையணி முகாமை பலப்படுத்தியுள்ளதேடு. அந்த முகாமை குறித்துக்காட்டுவதற்காக பதாதை ஒன்றையும் சுதந்திரபுரம் சந்தியில் அமைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பில் முல்லைத்தீவு மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை தோன்றியுள்ளது. ள்ளநாட்டுப் போர் 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதியோடு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுடன், விடுதலைப்புலிகளை இலங்கையில் இருந்து முற்றிலுமாக துடைத்தெறிந்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

யுத்தம் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்தும் விட்டன. முன்னைய அரசாங்கத்தின் ஆட்சியும் வீழ்த்தப்பட்டும் விட்டன. இந்நிலையில் வடக்கில் இருந்து இராணுவக் குறைப்புப் பற்றி பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டுக் கொண்டு இருக்கையில் இவ்வாறு இராணுவத்தினர் தமது இருப்பு நிலைகளை புதுப்பித்துக் கொண்டும் பலப்படுத்திக் கொண்டும் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.