இந்த வருட வாகன விபத்துக்களில் 2,666 பேர் பலி
இதுவரையிலுமான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2 ஆயிரத்து 666 பேர் பலியாகியுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு நடவடிக்கைளுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் அமரசிறி சேனாரத்ன இந்த தகவலை எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
இவ்வாறு பலியானவர்களில் உந்துருளியில் (motor bic) பயணித்தோர் 968 பேர் உள்ளடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, கடந்த 19 நாட்களில் மாத்திரம் மேல் மாகாணத்தில் வீதி ஒழுங்குகளை மீறிய 54 ஆயிரத்து 93 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை தலைமையக போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பான பிரதி காவல்துறை மாஅதிபர் அமரசிறி சேனாரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.