சிரிய வான்தாக்குதல்: 26 பொதுமக்கள் உயிரிழப்பு
சிரியாவின் வட-கிழக்கு பகுதியில் அமெரிக்க கூட்டுப் படைகள் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 26 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக சிரிய ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வட-கிழக்கு சிரியாவின் ஹசாகா மாகாணத்தின் அல்-ஹோல் நகரிற்கு அருகிலுள்ள அல்-கான் எனும் கிராமத்திலேயே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 7 சிறுவர்கள் மற்றும் 4 பெண்கள் உள்ளடங்குவதாக கண்காணிப்பு மையம் கூறியுள்ளது. இடிபாடுகளில் இருந்து சடலங்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க கூட்டுப் படையினரின் ஆதரவுடன் குர்தீஷ், அரபு கிளர்ச்சி குழுக்கள் சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது கடந்த ஒரு மாத காலமாக தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.