Breaking News

அரச ஊழியர்களுக்கு புதிய சம்பள திருத்தம்

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கும் வகையில் புதிய சம்பளத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. 

புதிய சம்பள திருத்தம் அறிமுகப்படுத்தப்படாவிட்டால் மீண்டும் சம்பள முரண்பாடுகள் ஏற்படலாம் என்று அமைச்சின் செயலாளர் ஜினசிறி தடல்லகே கூறியுள்ளார். 

அரச ஊழியர்களுக்காக இடைக்கால வரவு செலவுத்திட்டம் மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்ட ரூ.10,000 கொடுப்பனவை மூன்று கட்டங்களாக அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதாக அரசாங்கம் அண்மையில் தெரிவித்தது. 

எனினும் இவ்வாறு அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும் போது, தற்போது உள்ள சம்பள விகிதங்களில் மாற்றம் ஏற்படக் கூடாது என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

எவ்வாறாயினும் இது தொடர்பில் அமைச்சின் செயலாளர் ஜினசிறி தடல்லகேவிடம் வினவியபோது, 

அரச ஊழியர்களுக்காக இடைக்கால வரவு செலவுத்திட்டம் மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்ட ரூ.10,000 கொடுப்பனவை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் போது சம்பள முரண்பாடுகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.