Breaking News

தமிழ் மக்கள் பேரவை மக்­களின் ஜன­நா­யக வெளியைத் திறந்­துள்­ளது - சிவ­சக்தி ஆனந்தன்

தமிழ் மக்கள் இது­வரை அறி­யா­தி­ருந்த அல்­லது மறுக்­கப்­பட்­டி­ருந்த ஜன­நா­யக வெளி, தமிழ் மக்கள் பேர­வையின் உத­யத்தின் மூலம் திறந்­து­வைக்­கப்­பட்­டுள்­ளது. இது எந்த அர­சியல் கட்­சிக்கும் எதி­ரா­ன­தல்ல என்­பதை அதன் இணைத்­த­லை­வர்கள் மிகத் தெளிவாக வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­னர் என்று ஈழ மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் செய­லா­ளரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சிவ­சக்தி ஆனந்தன் தெரி­வித்­துள்ளார்.

தமிழ் மக்கள் பேர­வையின் உதயம் குறித்து வௌியிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவ்­வ­றிக்­கையின் விபரம் வரு­மாறு:

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினை கட்­ட­மைப்பு சார் நிறு­வ­ன­மாக முன்­வைக்­கப்­பட்ட தமிழ் தேசிய சபை என்னும் கருப்­பொ­ரு­ளுக்கு தற்­பொ­ழுது தமிழ் மக்கள் பேரவை மூலம் செயல்­வ­டிவம் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. தேர்தல் அர­சி­ய­லுக்கும் அப்பால் அனைத்து மக்­க­ளையும் ஒருங்­கி­ணைப்­ப­தற்­கான களம் ஒன்று அவ­சி­ய­மா­னது என்­பதன் அடிப்­ப­டை­யி­லேயே தமிழ் தேசிய சபையின் முக்­கி­யத்­துவம் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டது. 

மக்கள் வெறு­மனே தேர்­தலில் வாக்­க­ளிக்கும் இயந்­திரம் அல்ல. அவர்­களின் பங்­க­ளிப்­பில்­லாமல் எந்­த­விதப் போராட்­டமும் பய­ன­ளிக்­காது. இந்த யதார்த்­தத்தை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை புறக்­க­ணித்­ததன் விளைவே இன்று பல்­வேறு அமைப்­பு­களும், துறைசார் நிபு­ணர்­களும், புத்­தி­ஜீ­வி­களும், சமூக அக்­க­றை­கொண்ட ஜன­நா­யக சக்­தி­களும் ஒன்­றி­ணைந்து இந்த அமைப்பை உரு­வாக்க வேண்­டிய சூழல் ஏற்­பட்­டுள்­ளது.

ஆகவே இதனை எந்­த­வொரு கட்­சியும் தமக்கு எதி­ரான அமைப்பு என்று எண்­ணாமல், அதன் நோக்­கத்தைப் புரிந்­து­கொண்டு, அத­னுடன் எவ்­வாறு இணைந்து சென்று எமது அர­சியல் இலக்கை அடை­யலாம் என்று சிந்­திப்­பதே இரா­ஜ­தந்­திர அர­சி­யலை மேற்­கொண்­டுள்ள அனைத்து தரப்­பி­ன­ரதும் சாதுர்­ய­மான நட­வ­டிக்­கை­யாக அமையும்.

பல்­வேறு தரப்­பி­ன­ரையும் ஒரே அரங்கில் அம­ர­வைத்து தமது அங்­கு­ரார்ப்­ப­ணத்தைச் செய்­துள்ள தமிழ் மக்கள் பேர­வையின் ஏற்­பாட்­டுக்­கு­ழு­வி­னரை மன­தாரப் பாராட்­டு­கின்றோம். தமிழ் மக்­களின் சமூக, அர­சியல், பொரு­ளா­தார அபி­லா­சை­களை முன்­வைத்து கட்சி மற்றும் தேர்தல் அர­சி­ய­லுக்கு அப்பால் சென்று அனைத்து மக்­க­ளி­னதும் கருத்­துக்­களைக் கேட்­ட­றி­வ­தற்கும் அவர்கள் தமது ஜன­நா­யக உரி­மையை நிலை­நாட்­டிக்­கொள்­வ­தற்­கு­மான வௌி திறக்­கப்­பட்­டுள்­ளது. இதை எதிர்ப்­பது நாம் எந்த ஒரு இனத்தின் உரி­மைக்­காகப் போரா­டு­கின்­றோமோ அந்த இனத்தின் உரி­மை­களை நாமே பறிப்­ப­தற்கு ஒப்­பாகும்.

தமிழ் மக்கள் பேரவை தேர்­தலில் யாருக்கும் போட்­டி­யாக களம் இறங்­கப்­போ­வ­தில்லை. ஆகவே கூட்­ட­மைப்பின் தேர்தல் அர­சி­ய­லுக்கு அது எவ்­வித பாதிப்­பையும் ஏற்­ப­டுத்­தப்­போ­வ­தில்லை. மக்­களின் நலன்­சார்ந்து மக்­களின் பங்­க­ளிப்­பு­ட­னேயே அனைத்தும் வெற்­றி­பெறும் என்று உண்­மை­யாக நம்­பு­ப­வர்கள் இந்த அமைப்பைக் கண்டு அஞ்­ச­வேண்­டி­ய­தில்லை. ஏமாற்று அர­சியல் செய்­ப­வர்­களே இத்­த­கைய அமைப்­புக்­களைக் கண்டு அஞ்­ச­வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இனி­யா­வது ஜன­நா­யக விழு­மி­யங்­களை மதித்து அங்­கத்­துவக் கட்­சி­களின் கோரிக்­கைக்கு மதிப்­ப­ளித்து கூட்­ட­மைப்பை ஒரு கட்­ட­மைப்­பாக உரு­வாக்­கு­வ­தற்கு முன்­வ­ர­வேண்டும். அது­வ­ரையில் அங்­கத்­துவக் கட்­சி­களை சமத்­து­வத்­துடன் நடத்­து­வ­தற்கு திட­சங்­கற்பம் எடுக்க வேண்டும். இது­வொன்­றுதான் எமது மக்­களின் சக­வாழ்­விற்கும் சமா­தா­னத்­திற்கும் சுய­ம­ரி­யா­தையைக் காப்­ப­தற்கும் ஏற்ற உகந்தவழியாக அமையும்.

விடுதலைக்காக தற்போதுவரையில் போரடிக்கொண்டிருக்கும் சமூகத்திற்காக தோளோடுதோள்நின்று போராடிவரும் நாம் கடந்த காலங்களில் பல்வேறு மக்கள் அமைப்புக்களை உருவாக்கிய அனுபவம் உள்ளவர்கள். அதன் அடிப்படையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினராகிய நாம் தமிழ் மக்கள் பேரவையை முழு மனதுடன் வரவேற்கிறோம். அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளோம் என்றுள்ளது.