விக்னேஸ்வரன் என்ற சுனாமி பேரலையில் சம்பந்தன் சிக்கித் தவிக்கிறார்
விக்னேஸ்வரன் என்ற சுனாமிப் பேரலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சிக்கி தவிக்கிறார் என்று தெரிவித்துள்ளார், மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன.
“விக்னேஸ்வரன் என்ற சுனாமி பேரலையில் சம்பந்தன் சிக்கித் தவிக்கிறார். இந்த சுனாமிப் பேரலையிலிருந்து சம்பந்தனால் மீண்டு வர முடியவில்லை.வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் மக்கள் இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளதன் மூலம் கூட்டமைப்புக்குள் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. விக்னேஸ்வரன் மேலே இருக்கிறார். சம்பந்தன் கீழே இருக்கிறார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.