பென்சேகாவை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை
பீல் மார்சல் சரத் பென்சேகாவை உடன் கைது செய்ய வேண்டும் என “தாய் நாட்டுக்கான இராணுவ அமைப்பு” தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் தலைவர் மேஜர் அஜித் பிரசன்ன இவ்வாறு குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பேரேரா வெளியிட்ட கருத்தை அடிப்படையாக கொண்டே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சரத்பொன்சேகா இராணுவத் தலைவராக இருந்த போது அவருடைய விசேட குழு ஒன்று தான் கீப்னொயா என்பவரை தாக்கியது என ஜோசப் மைக்கல் பேரேரா நாடாளுமன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.அது சம்பந்தமாக அவரிடம் தகவல் இருப்பதாகவும கூறியுள்ளார் என அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக அந்த குழுவில் இருந்தவர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துமாறு ஏன் இரகசிய காவற்துறைக்கு அறிவிக்கவில்லை எனவும் அவரிடம் வினவியதாக குறிப்பிட்டார்.
தற்போது இணையத்தளங்களில் பெரும்பாலும் உலவும் செய்தியான பிரகீத் எக்னலிகொடவின் மனைவி தெரிவித்த கருத்து தொடர்பிலும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து தெரிவித்தார்.
இறுதி யுத்தக்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுடான மோதலில் தமிழ் மக்களை தொகுதிகளாக கொலை செய்வதற்கு ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக பிரதீப் எக்னெலிகொட ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.இது சம்பந்தமாக அவரிடம் பழிவாங்கும் நோக்கிலேயே அவர் கடத்தப்பட்டார் என சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹசேனின் அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் இலங்கை ராணுவத்தினர் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி மக்களை கொன்றதாக தெரிவிக்கப்படவில்லை.அப்படியானால் ரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட செய்தி போலியானது. எனவே, அதனை வெளிப்படுத்தியவர் பிரதீப் என்னெலிகொட.
புலனாய்வுத்துறையைச் சார்ந்த 4 பேரை வைத்துக்கொண்டு விசாரணை நடத்திவரும் தரப்பினர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான கருத்தை வெளியிட்ட சந்தியா எக்னெலிகொடவை ஏன் இன்னும் விசாரிக்கவில்லை என மேஜர் அஜித் பிரசன்ன கேள்வியெழுப்பினார்