Breaking News

கிராம இரா­ஜ்ஜியம் குறித்து அச்­சமடைய ­தே­வை­யில்­லை!- கூட்­ட­மைப்­புக்கு அர­சாங்கம் அறி­வுரை

கிராம இராஜ்ஜி­யத்­திட்­டத்தை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் எதிர்ப்பதில் எவ்­வித அர்த்­தமும் கிடை­யாது. இதன் மூலம் வடக்கு, கிழக்கின் தனித்­துவம் பேணப்­படும். இதனால் வட­மா­காண சபைக்கு எந்­த­ வி­த­மான பாதிப்பும் இல்­லை என்று அர­சாங்கம் நேற்­று அறி­வித்­தது.

பிட்­ட­கோட்டே­யி­லுள்ள ஐ.தே.கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் உரை­யாற்­றிய ஐ.தே.கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாசிம் இவ்­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் இங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் அர­சாங்­கத்தின் கிராம ராஜ்­ஜி­யத்­திட்டம் தொடர்பில் வீணான அச்சம் கொண்­டுள்­ளனர். இது தொடர்பில் அவர்கள் முழு­மை­யாக அறி­ய­வில்லை. எனவே இத்­திட்டம் முழு­மை­யாக தாயா­ரிக்­கப்­பட்ட பின்னர் அது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ருடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­படும்.

உண்­மையில் கிராம ராஜ்­ஜி­யத்­திட்­டத்தால் வடக்கு – கிழக்கு மாகா­ணங்­களில் தனித்­துவம் பாது­காக்­கப்­படும். இதன் மூலம் 2500 குழுக்கள் ஏற்­ப­டுத்­தப்­படும்.

அக் குழுக்­களில் பிர­தேச சபை, மாகாண சபைகள் உட்­பட அனைத்து கிராம மட்­டத்­தி­லான வளங்கள் அனைத்தும் இக் குழுக்­க­ளுக்கு உள்­ளீர்க்­கப்­படும்.

அதன் பின்னர் குறிப்­பிட்ட கிரா­மங்­களைச் சேர்ந்த அர­சி­யல்­வா­திகள், மதத் தலை­வர்கள் அடங்­கிய குழு அமைக்­கப்­படும். அவர்கள் ஊடாக அனை­வ­ரது இணக்­கப்­பாட்­டிற்கு அமைய கிரா­மங்­களின் அபி­வி­ருத்­திகள் மேற்­கொள்­ளப்­படும். இதுவே கிராம ராஜ்­ஜி­யத்தின் வரை­ய­றை­யாகும். இதனால் வட­மா­காண சபையின் நட­வ­டிக்­கைகள் பாதிக்­கப்­பட மாட்­டாது.

அது தொடர்பில் வட­மா­காண சபை முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் எந்­த­வி­த­மான அச்­சமும் கொள்ளத் தேவை­யில்லை. இத்­திட்டம் முழு­மை­யாக தயா­ரிக்­கப்­பட்ட பின்னர் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­படும். கிராம ராஜ்­ஜி­யத்­திட்டம் தொடர்­பாக தெளி­வு­ப­டுத்­தப்­படும்.

பொதுத் தேர்­தலின் பின்னர் ஐ.தே.கட்­சியால் ஆட்சி அமைக்­கக்­கூ­டிய வாய்ப்பு இருந்­தது. ஆனால் நாம் முத­லிடம் கொடுப்­பது நாட்­டிற்கே ஆகும். கட்­சிக்கு இரண்டாம் இடமே வழங்­கினோம்.

இதற்­க­மை­யவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கம் ஏற்படுத்தப்படும்.மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நாம் நிறைவேற்றினோம் என்றார்.