ஐரோப்பாவில் பத்து லட்சத்தை கடந்த குடியேறிகள்
ஐரோப்பாவுக்குள் நுழைந்த குடியேறிகளின் எண்ணிக்கை பத்து லட்சத்தை கடந்துள்ளதாக குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கையானது, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நான்கு மடங்கு அதிகமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவர்களில் பெரும்பாலனவர்கள் கடல் மார்க்கமாக வந்துள்ளனர். சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் துருக்கியில் இருந்து கிரேக்கத்துக்கு கடல் வழியாக வந்துள்ளனர்.இவ்வாறு வந்த அகதிகளில் பெரும்பாலானோர் சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் 3 ஆயிரத்து 695 பேர் கடலில் மூழ்கி அல்லது காணாமல் போயுள்ளதாக குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு குறிப்பிட்டுள்ளது.