Breaking News

பரீட்சை ஆணையாளர் கடந்த அரசாங்க கொள்கைகளை பின்பற்றுகின்றார் – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

பரீட்சை ஆணையாளளர் கடந்த அரசாங்க கொள்கைகளை பின்பற்றுகின்றார் என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. பரீட்சைக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கருத்தரங்குகள், வகுப்புக்கள், பரீட்சை வினாத்தாள் குறித்து கலந்துரையாடல் என்பனவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையுத்தரவு ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவினால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த தடையுத்தரவு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது எனவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடை விதிப்பதில் பயனில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.