Breaking News

அமெரிக்காவின் கோரிக்கையை அவுஸ்ரேலியா ஏற்குமா? மறுக்குமா?

ஐ.எஸ் ஆயுததாரிகளுக்கு எதிரான யுத்ததிற்கு மேலதிக இராணுவ உதவிகளை வழங்க வேண்டுமென்ற அமெரிக்காவின் கோரிக்கையை அவுஸ்ரேலியா நிராகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

சிரியா மற்றும் ஈராக்கில் நிலை கொண்டுள்ள ஐ.எஸ் ஆயுததாரிகளுக்கு எதிராக தாக்குதல்கள் மேற்கொள்ள, மேலதிக இராணுவ உதவிகளை வழங்குமாறு யுத்ததில் ஈடுபட்டுள்ள அனைத்து நாடுகளிடமும் அமெரிக்கா பாதுகாப்புச் செயலாளர் ஆஷ் கார்டர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையிலேயே அமெரிக்காவின் கோரிக்கைகயை அவுஸ்ரேலியா நிராகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் அமெரிக்காவின் கோரிக்கை தொடர்பில் ஏனைய நாடுகள் இதுவரை எந்தவொரு கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.

இதேவேளை, சிரியா மற்றும் ஈராக்கில் நிலை கொண்டுள்ள ஐ.எஸ் ஆயுததாரிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகள் கடந்த ஒரு வருடங்களாக தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.