சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் தயார்!– ஜனாதிபதி
புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளை பூர்த்தி செய்ய எமக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அவசியம் உண்டு. எமது அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அஞ்சப் போவதில்லை.
19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக தெளிவானதும் விரிவானதுமான அசரியல் அமைப்பு செயன்முறை ஒன்றை அறிமுகம் செய்ய வேண்டிய தேவையுள்ளது. எனினும் உச்ச நீதிமன்றின் தீர்மானங்களுக்கு தலைசாய்க்க வேண்டும்.
கடந்த பத்து மாதங்களில் சமூக மற்றும் அரசியல் ரீதியான மாற்றங்களை செய்வதில் அரசாங்கம் கூடிய ஆர்வம் காட்டியது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தேர்தலில் வெற்றியீட்டியிருந்தால் நாடு பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கும்.
சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்பட்டிருக்கக் கூடிய அபாயம் காணப்பட்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரான்ஸ் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அங்கு வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பு ஒன்றில் அண்மையில் பங்கேற்றிருந்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.