என்னுடனுள்ள எவரும் அரசாங்கத்துடன் இணைய மாட்டார்கள் -மஹிந்த
என்னுடன் எதிர்க் கட்சியிலுள்ள எவரும் இனிமேல் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள மாட்டார்கள் என குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
என்னுடன் இருப்பவர்களை வழக்குகளில் மாட்டிவிட்டு அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்ள முயற்சிகள் நடைபெறுகின்றன. அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள ஆசையுள்ள எவரும் தற்பொழுது எதிர்க் கட்சியில் இல்லை. அவ்வாறானவர்கள் எல்லோரும் சென்று முடிந்து விட்டார்கள்.
அவர் வரப்போகிறார். இவர் வரப்போகிறார் என அரசாங்கத்திலுள்ளவர்கள் குறிப்பிடும் கருத்துக்கள் பொய்யானவை. என்னுடன் இருப்பவர்களை அரசாங்கத்தின் பக்கம் எடுப்பதற்கு பாரிய முயற்சியொன்று முன்னெடுக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.