தாஜூடீன் படுகொலை சந்தேகநபர் - வெளியானது புகைப்படம்
பிரபல ரக்பீ வீரர் வசீம் தாஜூடீன் படுகொலையுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வாகன சாரதியான திஸ்ஸ என்பவர் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், திஸ்ஸ என்பவரைத் தமக்குத் தெரியாது என்று மஹிந்தவின் மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தாஜூடீன் மரணத்துடன் இணைத்துப் பேசப்படும் மஹிந்தவின் இரண்டாவது புதல்வரான யோசித்தவுடன் சந்தேகநபரான திஸ்ஸ சந்தோஷமாகக் கலந்துரையாடும் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
திஸ்ஸ என்பவர் தாஜூடீன் கொலை மற்றும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவின் மீதான தாக்குதல் சம்பவத்திலும் தொடர்பு கொண்டிருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இராணுவத்தில் இருந்து தப்பிவந்த திஸ்ஸ பின்னர் மஹிந்த ராஜபக்சவின் சாரதியாக தொழில்புரிந்துள்ளதோடு, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிலும் இணைக்கப்பட்டிருந்தார் எனக் கூறப்படுகின்றது.மஹிந்தவின் குடும்ப பாதுகாப்பைக் கண்காணிக்கும் பணிகளை மேற்கொண்ட அவர், அந்தக் குடும்பத்துக்கு எதிரானவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் குழுவின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.