அமெரிக்க அதிகாரிகளின் இலங்கை விஜயம் குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்
புதிய அரசாங்கம் ஆட்சியேற்றதன் பின்னர் அமெரிக்க இராஜதந்திரிகள் இலங்கைக்கு அடிக்கடி விஜயம் மேற்கொண்டு வரும் நிலையில், அது குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச இராஜதந்திரிகளின் விஜயத்தை விமர்சிக்கவோ, எதிர்க்கவோ இல்லையென குறிப்பிட்ட அவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் ஐ.நா மனித உரிமை பேரவையின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் வருகை தருவது குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த அதிகாரிகள் இலங்கையில் மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் மற்றும் அவர்களுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் உடன்படிக்கைகள் குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையை விடுதலைப் புலிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கும், அவர்களை பலப்படுத்தவுமே அமெரிக்க அதிகாரிகள் இலங்கை வருவதாக மஹிந்த தரப்பினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது