யாழ்.மாநகர சபை முன்னாள் உறுப்பினர் நிசாந்தன் கைது (காணொளி இணைப்பு)
யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் நிசாந்தன் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதங்களில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றினை அடிப்படையாக வைத்து இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தின் மூலம் இவருக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரினால் குறிப்பிட்ட இணையத்தளங்கள் சில தனிப்பட்ட நபர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் செய்திகளை வெளியிட்டு வந்தன. அவை தொடர்பில் யாழில் உள்ள பல்வேறு பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன.
குறித்த நபரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த நபரை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் குறித்த இணையத்தளங்களால் இவருடாக அவதூறுக்கு உள்ளானவர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறு யாழ்.பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை குறித்த இணையத்தளங்கள் அண்மையில் சுண்ணாகம் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டு இருந்தன. அது குறித்த அவதூறுக்கு உள்ளான யுவதி தனது வீடியோ வாக்கு மூலம் ஒன்றினை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார்.
அதில் தன்னை போன்று குறித்த இணையத்தளங்களால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் அவ்வாறான இணையத்தளங்களுக்கு எதிராக ஒன்றினைந்து நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என அந்த வீடியோ வாக்கு மூலத்தில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.