நாடுதழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஜே.வி.பி குதிப்பு
நல்லாட்சி மாற்றத்தில் பாரிய பங்கு வகித்த ஜே.வி.பி. கட்சி தற்போது அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மஹிந்த தரப்பினரை விடவும் தீவிரமான முறையில் ஜே.வி.பி. யினர் விமர்சனம் செய்கின்றனர்.
அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புகளை மீறி செயற்படுவதுடன், பொதுமக்கள் அளித்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் ஜே.வி.பி. குற்றம் சாட்டி வருகின்றது.
அத்துடன் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராகவும் வாக்களித்திருந்ததுடன், அதற்கெதிரான ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர்.
எனினும் அண்மைக்காலம் வரை ஜே.வி.பி கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் நெருக்கமான நல்லுறவு நிலவியது. தற்போது அதனையும் முறித்துக் கொள்ளும் வகையில் ஜே.வி.பி தனது செயற்பாடுகளை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது.
இதன் ஒருகட்டமாக ஜனாதிபதி பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவடையும் ஜனவரி எட்டாம் திகதி அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாடுதழுவிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது.
அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புகளை மீறி செயற்படுவதுடன், பொதுமக்கள் அளித்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் ஜே.வி.பி. குற்றம் சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.