Breaking News

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஜூலை மாதம் வரை பிற்போடு

எதிர்வரும் 2016ம் ஆண்டு ஜூலை மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதில் காணப்படும் சிக்கல் நிலைமைகள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த சிக்கல் நிலைமைகளுக்கு தீர்வு காண குறைந்தபட்சம் மூன்று மாத காலம் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய முறையில் மார்ச் மாதம் தேர்தலை நடாத்துவது ஒரு வழி அல்லது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு புதிய கலப்பு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமமெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்ந்தும் ஆளுனர்கள் மற்றும் செயலாளர்களின் நிர்வாகத்தின் கீழ் ஜூலை மாதம் வரையில் தொடரும் என அரசாங்க உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.