வடக்கு முதலமைச்சர் மாத்திரம் வடமாகாண சபை அல்ல - சி.வி.கே. ஆவேசம்
வடக்கு முதலமைச்சர் மாத்திரம் வடமாகாண சபை அல்ல என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையில் இன்று திங்கட்கழமை நண்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நத்தார் தின நிகழ்விற்கு வடமாகாண முதலமைச்சர் அழைக்கப்பட்டிருந்தபோதும் ஏனைய உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் வடமாகாண சபையின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இந்த நிகழ்வு தொடர்பில் வடமாகாண சபைக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் கூறினார்.
வடமாகாண சபை என்பது சபை உறுப்பினர்களையும் உள்ளடக்கியதே என சுட்டிக்காட்டி அவர்,
இந்த நடவடிக்கை வடமாகாண சபையைப் பிரித்தாளும் ஒரு செயற்பாடா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.