Breaking News

பயங்­க­ர­வா­தத்தை முறி­ய­டித்­த­து­போ­ன்றே சமா­தா­னத்தை வெற்­றி­கொள்ள வேண்­டி­யுள்­ள­து

பயங்­க­ர­வா­தத்தை முறி­ய­டித்­ததைப் போன்றே தற்­போது எங்­க­ளுக்கு சமா­தா­னத்தை வெற்­றி­கொள்ள வேண்­டி­யி­ருக்­கின்­றது. அதற்­கா­கவே ஜன­வரி 8ஆம் திகதி மக்கள் எமக்கு ஆணையை வழங்­கி­னார்கள். 

யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டு வந்­துள்­ள­தோடு மோதலால் பாதிக்­கப் பட்ட மக்­களின் மனங்­களில் ஏற்­பட்­டுள்ள காயங்­களை ஆற்­று­வ­தற்கும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். காயம் ஏற்­பட்டால் அதனை ஆற்­று­வது அவ்­வ­ளவு இல­கு­வான காரி­ய­மல்­ல­வென பிர­தமா் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

தியத்­த­லாவை ராணு­வ­மு­காமில் பயிற்சி பெற்று வெளி­யே­றிச்­செல்லும் இரா­ணுவ வீரா்­களின் அணி­வ­குப்பு நேற்று இடம்­பெற்­ற­போது அதில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந் கூறு­கையில்,

இரா­ணுவ வீரா்கள் குறித்து பேசும் போது யுத்­தத்தை இறு­தி­வ­ரைக்கும் கொண்டு சென்ற பீல் மாஷர் சரத் பொன்­சே­கா­வையும் மறந்­து­விட முடி­யாது. இந்த யுத்­தத்தை வெற்­றி­கொண்­டது இரா­ணுவ வீரா்­க­ளாகும். அப்­ப­டி­யென்றால் அதற்­கான சகல புக­லையும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கே வழங்­க­வேண்டும். அர­சி­யல்­வா­திகள் தங்­க­ளது தனிப்­பட்ட கீர்த்­தியை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக ராணு­வத்தை பயன்­ப­டுத்­தக்­கூ­டாது. .

இரா­ணு­வத்­தினர் பயங்­க­ர­வா­தத்தை முறி­ய­டித்­ததை போன்றே தற்­போது எங்­க­ளுக்கு சமா­தா­னத்தை வெற்­றி­கொள்ள வேண்­டி­யி­ருக்­கின்­றது. அதே­போன்று யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு கிழக்கு பிர­தே­சங்கள், தென்­ப­கு­தி­களில் உயி­ரி­ழந்த மக்கள், இன­வா­தத்­தினால் பிரிந்த மக்கள் ஆகிய அனை­வ­ரையும் ஒன்­றி­ணைக்க வேண்டி இருக்­கின்­றது.அதற்­கா­கவே ஜன­வரி 8ஆம் திகதி மக்கள் எமக்கு ஆணையை வழங்­கி­னார்கள். அதனை நடை­மு­றைப்­ப­டுத்த நாம் அனை­வரும் சர்­வ­தே­சத்தின் ஒத்­து­ழைப்பை பெற்­றுக்­கொள்ள வேண்டும்.

யுத்த மோதலால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் மனங்­களில் ஏற்­பட்­டுள்ள காயங்­களை ஆற்­று­வ­தற்கும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். காயம் ஏற்­பட்டால் அதனை ஆற்­று­வது அவ்­வ­ளவு இல­கு­வான காரி­ய­மல்ல

கடந்த 2009ஆம் ஆண்­டு­வரை நாம் யுத்தம் செய்­தது வேறு ஒரு அர­சாங்கம் ஒன்றை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­காக யுத்தம் புரிந்த பயங்­க­ர­வா­தி­க­ளு­ட­னாகும். ஆனால் நாம் இப்­போது முகம்­கொ­டுக்க வேண்­டி­யி­ருக்கும் உலகம் வித்­தி­யா­ச­மா­ன­தாகும்.யுத்தம் செய்யம் முறை­மையும் வித்­தி­யா­ச­மாகும்.அந்த இடத்­துக்கு நாம் செல்­ல­வேண்டும்.அதற்­காக யுத்­த­மு­றை­மையில் முன்­நேற்றம் அடைந்­துள்ள நாடு­க­ளுடன் தொடா்­பு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும்.

எமது இரா­ணு­வமும் வளர்ந்த நாடுகளின் பாதுகாப்புத் தரப்பினருக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதோடு, இராணுவத்தை நவீனமயப்படுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது அதற்காக சீனா, இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அதேபோல அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளுடன் நல்ல உறவுகளைப் பராமரிக்க வேண்டும் என்றார்.