Breaking News

இலங்கை இராணுவத்தை மறுசீரமைக்குமாறு ஐ.நா. பணிப்புரை

இலங்கை இராணுவத்தை மறுசீரமைக்குமாறு ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்புரை வழங்கியுள்ளது.

இவ்வாறு செய்வதாயின் பிரித்தானிய அரசாங்கம் 6.6 மில்லியன் ஸ்டேலின் பவுன்களை இலங்கைக்கு வழங்க தீர்மானித்துள்ளது.

இந்நாட்டு பாதுகாப்புப் படை வரலாற்றில் மனித உரிமைகள் ஆணைக்குழு இராணுவத்தை மறுசீரமைக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

இந்த மறுசீரமைப்பின் பின்னர் இலங்கை இராணுவத்துக்கு பிரித்தானியாவில் பயிற்சி வழங்கவும் அந்நாட்டு அரசாங்கம் உடன்பட்டுள்ளதாகவும் இன்றைய சிங்கள நாளிதழொன்று அறிவித்துள்ளது.