வடிகானைச் சுத்தமாக்கவாவது வடக்கிலுள்ள இராணுவத்தை பயன்படுத்துவோம் - சி.வி
எந்தவித வேலையும் இல்லாத நிலையில் வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை வைத்து வடக்கின் கால்வாய் மற்றும் வடிகாலமைப்பு என்பவற்றை சுத்தம் செய்யும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு இராணுவத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் இராணுவத்தினர் கால்வாய்களை மூடியதனால் தற்பொழுது வெள்ள அபாயத்தை மக்கள் எதிர் நோக்கியுள்ளதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.