அரசாங்கத்தின் மீதான எமது சந்தேகங்கள் நியாயமானவை - வடக்கு முதல்வர்
அரசாங்கம் பலவிதமான உறுதிமொழிகளை அளித்துவந்திருந்தாலும் அவை நிறைவேற்றப்படவில்லை. ஆகவே, அரசாங்கத் தின் மீதான எமது சந்தேகங்கள் நியாயமான வையென தெரிவித்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், யுத்தம் நிறைவடைந்து ஏழாண்டுகளாகின்ற நிலை யில் எமது மக்கள் ஏதிலிகளாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மாற்றம் நிதி ஏற்பாட்டு நிறுவனத்தின் ஏற் பாட்டில் வட இலங்கையின் போரின் பின்னரான காணிப்பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளல் எனும் தலைப்பில் யாழ்.பொதுநூலக மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
ஒரு பாரம்பரிய சமூகத்தின் அடையாளமே அது வாழ்ந்து வரும் நிலந்தான். பாரம்பரிய நிலத்தில் இருந்து சமூகத்தைப் பிரித்தால் பிரிக்கப்பட்ட சமூகம் அநாதையாகிவிடும். அதன் உறுப்பினர்கள் அகதிகளாகிவிடுவர். அகதிகள் என்றால் புகலிடம் அற்றவர் என்று அர்த்தம். கதி என்ற சொல்லுக்கு ஒரு அர்த்தம் புகலிடம். ஆகவே அ(சக)கதி என்றால் புகலிடம் அற்றவர் என்று பொருள்படுகிறது. எமது பாரம்பரிய சமூகத்தைப் புகலிடம் அற்றவர்கள் ஆக்கவே பல நடவடிக்கைகள் அண்மைக்காலங்களில் எடுக்கப்பட்டு வருகின்றன.
2009ஆம் ஆண்டு மே மாதம், யுத்தமானது முடிவுக்கு வந்தது. யுத்தம் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டன. வடகிழக்கு மாகாணங்களுக்குப் படையெடுத்து வந்தவர்கள் யுத்தம் முடிந்ததென்று தங்கள் இடங்களுக்குத் திருமப்பிச் செல்லவில்லை. எமது பாரம்பரிய நிலங்களில் பாரிய பகுதியைப் படைகள் தம் வசம் பற்றிவைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள். அந்த நிலங்களில் உரிமையுடன் வாழ வேண்டியவர்கள் நிராதரவாக, நிரக்கதியினராக பிறர் நிலங்களில் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் இருபது வருடங்களுக்கு மேலாக இவ்வாறான இடர் வாழ்க்கையில் இருந்து வருகின்றார்கள்.
காணிகளை இராணுவம் கையேற்று வைத்திருப்பதை நான் காலத்தின் கோலமாகக் கருதவில்லை. காலாதிகாலமாகக் கரவாகக் கடையப்பட்ட கருத்துக்களின் கடை நிலையாகவே நான் அவர்களின் நடவடிக்கைகளைக் காண்கின்றேன். நாட்டுக்குச் சுதந்திரம் கிடைக்க முன்னரே அரசகுடியேற்றஙக் ள் ஆரம்பமாகிவிட்டன. அதன் அர்த்தம் என்ன என்று ஆராயந்தோமானால் தமிழ ்மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த இடங்களில் இன அமைப்பில் மாற்றங்களை இழைக்க வேண்டும் என்ற இழிவான கரவெண்ணமே அக் குடியேற்றஙக்ளின் காரணம் என்பது தெரியவரும்.
போர் முடிந்து ஏழாவது வருடம் நடந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில், மீள் குடியிருப்பு வேண்டிப் பதியப்பட்ட இரண்டாயிரம் பேரின் வழக்குகள் இன்னும் தாமதமடைந்திருக்கும் இந்நிலையில், எமது மக்களின் வாழ்வாதாரங்கள் ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டு அவர்கள் ஏதிலிகளாக எவரோ ஒருவர் காணியில், வீட்டில், ஆதனத்தில் கவனிப்பாரற்று காத்துக் கிடக்கும் இவே்வளையில், மேற்படி சர்வதேச கொள்கைக் கருத்தானது ஒரு ஒளிக்கீற்றை எம்மண்ணில் உருவாக்கியுள்ளது.
மக்களின் பரிதவிப்பை நாங்கள் புரிந்துள்ளோம். ஆனால் அவர்களின் மீள்க்குடியேறும் உரித்தை உணர்ந்துள்ளோமா என்றால் பெருவாரியாக இல்லையென்றே கூற வேண்டும். இவ்வுரித்தின் தாற்பரியம் ஜனாதிபதி முதல் சகல மத்திய அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இராணுவத் தளபதிகளுக்கும் மிகத் திடமாகத் தெரியவர வேண்டும். தெரியப்படுத்த வேண்டும்.
மக்களை அகதிகளாக்கி, தம் நாட்டிலேயே அன்னியர்களாக்கி வருடக்கணக்காக அவர்களை ஏதிலி வாழ்வு வாழவிட சட்டம் இடம் கொடுக்கவில்லை என்ற கருத்தை நாங்கள் இன்று முன்வைப்போம். எங்கள் அரசாங்கங்களும் இராணுவத்தினரும் மக்களின் ஒரு முக்கியமான தனியுரித்தைப் பறித்து வைத்துப் பங்கம ஏற்படுத்தி அவர்கள் வாழ்க்கைகளைப் பாழ்படுத்தி வந்துள்ளார்கள் என்பதை எல்லோரும் அறியுமாறு கூறுவோம் என்றார்.