பயங்கரவாத தடைச்சட்டம் ஜனவரியில் நீக்கம்!
பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதற்கு பதிலாக புதிய சட்ட மூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்கவுள்ளதா கவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் அதன் மூலம் இலங்கைக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களை இல்லாதொழிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது
நீக்கப்படவுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள தேசப்பற்று சட்டமூலத்தைப்போன்று புதிய சட்டமூலமொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அமைப்புக்கள் பலவும் புலம்பெயர் அமைப்புக்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். அத்தோடு ஜெனிவா மனித உரிமை பேரவையிலும் இது தொடர்பான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.
நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்காகவே இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டது. ஆனால் யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள போதிலும் அரசாங்கம் இந்த சட்டத்தை தொடர்ந்து பேணி வருகிறது.
இந்த சட்டமூலத்தை பயன்படுத்தி வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யாது தடுத்து வைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அரசியல் கட்சிகள் பலவும் பல்வேறு அமைப்புக்களும் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.
இவ்வாறான நிலையிலேயே இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க அரசாங்கம் முயன்று வருகிறது. அத்தோடு இச்சட்டத்தை நீக்குவதுடன் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் ைத்து வருகின்றன.
இவ்வாறான நிலையிலேயே இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க அரசாங்கம் முயன்று வருகிறது. அத்தோடு இச்சட்டத்தை நீக்குவதுடன் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.