Breaking News

காணாமல் போனதற்கு காரணமானவர்களின் பெயர்களை வெளியிடுவோம்! என்கிறார் பரணகம

ஆணைக்­குழு முன்னால் சாட்­சி­ய­ம­ளித்த மக்கள் குற்­றஞ்­சாட்­டிய தரப்­பி­னரின் பெயர் விப­ரங்­களை காணாமல் போனோரை கண்­ட­றியும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் வெளி­யி­டுவோம் என்று ஆணைக்­கு­ழுவின் தலைவர் முன்னாள் நீதி­ய­ரசர் மெக்ஸ்வல் பர­ண­கம நேற்று  தெரி­வித்தார்.

யாழ். குடா நாட்டில் கடந்த ஆறு தினங்­க­ளாக காணா­மற்­போ­னோரின் உற­வு­க­ளி­ட­மி­ருந்து சாட்­சி­யங்கள் பதிவு செய்­யப்­பட்­ட­தா­கவும் ஆறு தினங்­களில் சுமார் 900 பேரி­ட­மி­ருந்து சாட்­சி­யங்கள் பெறப்­பட்­ட­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

சாட்­சி­யங்­களின் போது வெளி­வந்த தக­வல்­களைக் காணாமற் போன­தற்கு கார­ண­மா­க­வி­ருந்த படை அதி­கா­ரிகள், அர­சியல் கட்சி உறுப்­பி­னர்கள் தொடர்­பாக சாட்­சிகள் பல பெயர்­களை வெளி­யிட்­டுள்­ளனர். இந்தப் பெயர்கள், கட்­சிகள் குறித்து ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் வெளி­யி­டுவோம் என்றும் அவர் தெரி­வித்தார்.

ஆணைக்­குழு இது­வரை மேற்­கொண்ட விசா­ர­ணை­களில் சுமார் 5000 பேரிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.