2016 மார்ச்சுக்கு முன்னர் புதிய விசேட நீதிமன்றம்
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக அமைக்கப்படவுள்ள விசேட நீதிமன்றத்தின், சுயாதீன செயற்பாட்டின் நிமித்தம், விசேட சட்ட மூலமொன்றை பாராளுமன்றத்தில் முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சட்டத்தை சட்டவாக்கத் திணைக்களம் தயாரித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட வட்டராங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த விசேட நீதிமன்றத்துக்கு சர்வதேச நீதிமன்றங்களில் சேவை புரிந்துள்ள உள்நாட்டு நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
2016 மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டம் ஆரம்பிக்கப்பட முன்னர் அரசாங்கம் இந்த நீதிமன்றத்தை அமைத்து இது தொடர்பில் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.