2016 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்குமாம் - சுமந்திரன்
பிறக்க இருக்கும் 2016 ஆம் ஆண்டு சரித்திரம் வாய்ந்த ஒரு வருடமாக மாறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
நேற்று யாழ்ப்பாணத்தில் அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகளுடான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி அவர்களின் யோசனையின் கீழ் புதியதொரு அரசியல் சட்ட பொறிமுறையினை முன்வைக்க இருக்கின்றார்.அந்த ஜனாதிபதி அவர்களின் யோசனையிலே மூன்று விடயங்கள் முக்கியமாக கூறப்பட்டிருக்கின்றது.
அதில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, புதிய தேர்தல் சட்டம் திருத்தம் மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வு என்பன அடங்குகின்றன.
68 வருட கால பிரச்சினையினை தீர்க்கப்பட வேண்டும் என்று எழுத்து மூல பிரேரணையினை நாடாளுமன்றில் சமர்ப்பித்து ஆரம்பிக்கின்ற வருடம் எனக் குறிப்பிட்டுள்ளார். மிகவும் தெட்டதெளிவாக 2016 ஆம் ஆண்டிலே அரசியல் தீர்வு கிடைக்கும்.
தேசிய இனப்பிரச்சணைக்கான தீர்வு என அதில் கூறப்பட்டுள்ளது என்று எம்.ஏ. சுமந்திரன் கூறினார். இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் 2016 ஆம் ஆண்டு தீர்வு கிடைக்கும் என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.