Breaking News

உதயமானது தமிழ் மக்கள் பேரவை -காணொளி இணைப்பு(இரண்டாம் இணைப்பு )

எதிர்கால தமிழர் அரசியல் நடவடிக்கைகளை
கருத்தில் கொண்டு தமிழ் அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் இணைந்து தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு அமைப்பை இன்று யாழில் ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து அறியவருகின்றது.

இவ் அமைக்கப்பட்ட பேரவையில் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய அரசியல் கட்சியின் பிரமுகர்களும் வடமாமாகாண முதலமைச்சரும் மதத் தலைவர்களும் கலந்துகொள்ளவிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரவையின் ஊடக அறிக்கைக்கு இங்கே அழுத்தவும்

மேலும் இந்த கூட்டத்திற்கு யாழிலிருந்து வெளிவரும் தினக்குரல் மற்றும் வலம்புரி பத்திரிகை ஆசிரியர்களும் சமயப்பெரியார்கள் மற்றும் கல்வியலாளர்களும் கலந்துகொண்டிருந்தபோதும் ஊடகத் தரப்பில் ஏனையவர்கள் அழைக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



அதில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் த.தே.மக்கள் முன்னணி மற்றும் தமிழரசுக் கட்சி அதிர்ப்தியாளர்கள் என பலர் கலந்துகொண்டிருக்கின்றனர் குறிப்பாக தமிழரசுக் கட்சி முத்த தலைவரும் தமிழரசுக் கட்சி செயலாளர்களில் ஒருவருமான பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களும் கலந்துகொண்டுள்ளார். புளட் தலைவர் சித்தாத்தன் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டுள்ளமையால்  அதன் பிறிதொரு தலைவரான சிவநேசன் கலந்துகொண்டிருந்ததோடு ரெலோவினை நேர்ந்த சிவாஜிலிங்கம் மற்றும் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என்றும் தெரிய வருகின்றது.






முதலமைச்சரின் விளக்க உரை





 பேரவை உறுப்பினர் விபரம்

    Co-chairs


  1. Hon. Justice C V Vigneswaran – (Chief Minister, NPC)
  2. Dr. P Lakshman – (Senior Cardiologist, Teaching Hospital, Jaffna)
  3. Mr. T Vasantharajah – (Secretary, Batticaloa Civil Society)

  4. Action Committee Members


  5. Nallai Aathina Muthalvar
  6. Sivasiri Saba Vasutheva Kurukkal
  7. Rev. Fr. Jeyabalan Croos – (Diocese of Mannar)
  8. Rev. Fr. S V B Mangalarajah –(President, Justice & Peace Commission)
  9. Prof. C K Siththampalam – (Senior Vice President, TNA-Thamil Arasuk Katchchi)
  10. Mr. D Siththarthan - (Leader, TNA-PLOTE)
  11. Mr. Suresh Premachandran - (Leader, TNA-EPRLF)
  12. Mr. Gajendrakumar Ponnambalam – (Leader, TNPF)
  13. Prof. V P Sivanathan – (Patron, Jaffna Economist Association)
  14. Dr. K Premakumar – (Fmr. Dean, Faculty of Agriculture, Eastern University)
  15. Mr. K Sathasivam – (Batticaloa)
  16. Mr. S Somasundaram – (Treasurer, Batticaloa Civil Society)
  17. Mr. Muraleetharan – (Trincomalee)
  18. Mr. V Gopalapillai -(Amparai)
  19. Dr. G Thirukumaran – (President, University Teachers Association, Jaffna)
  20. Dr. A Saravanapavan – (Vice President, University Teachers Association, Jaffna)
  21. Rev. Fr. Racichandran – (Diocese of Jaffna)
  22. Mr. V Puvitharan – (President, Tamil Lawyers Association)
  23. Mr. N Singam – (Secretary, Tamil Civil Society Forum)
  24. Mr. N Inpanayagam – (National Fisheries Solidarity Movement)
  25. Mr. M Sivamohan – (Iranamadu Farmers’ Organizations Federation)
  26. Mr. Thevarajah - (President, Vavuniya Civil Society)

  27. Office of Convening Committee


  28. Dr. S Sivansuthan
  29. Mr. N Vijayasuntharam
  30. Mr. Alan Sathiadas
  31. Mr. S Janarthanan












முதலில் இதனை ஒரு அரசியல் கட்சியாக அல்லாமல் தற்போதைய அரசிற்கு சார்பான நிலைப்பாட்டினை தொடர்ந்து எடுத்துவரும் த.தே.கூட்டமைப்பின் தலமைக்கு அழுத்தம் கொடுக்கும் சிவில் அமைப்பாக ஆரம்பிப்பதாக ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டிருப்பதாக அறியவருகின்றது.

மேலும் தமிழரசு கட்சியிலிருந்து முக்கியமான தேசியத்திற்காக குரல்கொடுப்பவர்களும் கிழக்கு மாகாணத்திலிருந்து பேரவையில் நியதியுடன் செயற்படுவதற்கு சம்மதிப்பவர்களும் இதில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று தமிழ்கிங்டொத்திற்கு கிடைத்த உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிகமான தகவல்களை முந்திக்கொண்டு அறிவதற்கு தொடர்ந்தும் இணைந்திருங்கள்.




தொடர்புடைய முன்னைய செய்தி

விக்கி தலைமையில் புதிய கூட்டணி -தாமதம் வேண்டாம் எனக் கோரிக்கை