வேண்டாம் என்று கூறும் வரை வருவேன்- மஹிந்த
எப்போது வர வேண்டாம் எனச் சொல்கின்றார்களோ அது வரை வருவேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவுக்கு நேற்று வருகை தந்து விட்டு வெளியேறும் போது ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இதற்கும் செல்வேன். இன்னுமொன்றுள்ளது. அதற்கும் அழைக்கும் போது சென்று கொண்டே இருப்பேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சுயாதீன தொலைக் காட்சியில் கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் விளம்பரம் வெளியீட்டு மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ள இன்றும் அவர் வருகை தந்திருந்தார். நேற்று முன்தினம் வருகை தந்த அவர் நேற்றும் அழைக்கப்பட்டமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.