Breaking News

வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்­கெ­டுப்பு இன்று

ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து உரு­வாக்­கி­யுள்ள நல்­லாட்­சிக்­கான தேசிய அர­சாங்­கத்தின் 2016 ஆம் நிதி­யாண்­டுக்­கான
வரவு – செலவுத் திட்டம் தொடர்­பான மூன்றாம் வாசிப்பின் மீதான இறுதி வாக்­கெ­டுப்பு இன்று சனிக்­கி­ழமை மாலை 5 மணிக்கு இடம்­பெ­று­கி­றது. முத­லா­வது வாக்­கெ­டுப்பில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் வரவு – செல­வுத்­திட்டம் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள நிலையில் இன்று இறுதி வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

நவம்பர் மாதம் 20 ஆம் திகதி நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வினால் இரண்டாம் வாசிப்­பாக முன்­வைக்­கப்­பட்ட மேற்­படி வரவு – செலவுத் திட்­ட­மா­னது அமைச்­சர்கள், பிர­தி­ய­மைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், தொழிற்­சங்க பிர­தி­நி­திகள் மற்றும் பொது­மக்கள் ஆகிய அனைத்துத் தரப்­பி­னரின் ஆலோ­ச­னை­க­ளையும் அறி­வு­றுத்­தல்­க­ளையும் உள்­வாங்­கி­யி­ருந்­தது.

இந்­நி­லையில் பல்­வேறு திருத்­தங்­க­ளு­ட­னேயே வரவு செல­வுத்­திட்­டத்தை இன்று வாக்­கெ­டுப்­பிற்கு விட்டு பாரா­ளு­மன்­றத்தின் அங்­கீ­கா­ரத்தை பெற்றுக் கொள்­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கி­றது.

வரவு செல­வுத்­திட்டம் மீதான முத­லா­வது வாக்­கெ­டுப்பு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி இடம்­பெற்­ற­போது ஆத­ர­வாக 159 வாக்­கு­களும் எதி­ராக 52 வாக்­கு­களும் கிடைக்­கப்­பெற்­றி­ருந்­தன. இதன்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, ஜே.வி.பி., ஈ.பி.டி.பி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் ஆத­ர­வாக வாக்­க­ளித்­தி­ருந்த அதே­வேளை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் மஹிந்த ஆத­ரவு அணியைச் சேர்ந்த உறுப்­பி­னர்கள் எதி­ராக வாக்­க­ளித்­தி­ருந்­த­தனர்.

ஆளும் கட்­சிக்கு தாவுவர் 

இதே­வேளை தற்­போது எதிர்க்­கட்சி வரி­சையில் இருந்து வரு­கின்ற முன்னாள் அமைச்­சரும் பதுளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான லக்ஷ்மன் சென­வி­ரத்ன மற்றும் மஹிந்த ஆத­ரவு அணியின் உறுப்­பி­ன­ரான மனுஷ நாண­யக்­கார உள்­ளிட்ட பத்­துக்கும் மேற்­பட்ட உறுப்­பி­னர்கள் ஆளும்­கட்­சிக்கு தாவுவர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வாறு ஆளும் கட்­சிக்கு வரு­கின்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுப் பத­விகள் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் இது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ருடன் பேச்சு நடத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இது இவ்­வா­றி­ருக்க மஹிந்த அணியின் பிர­தா­னி­க­ளாக செயற்­பட்­டு­வந்த முன்னாள் அமைச்சர் விமல் வீர­வன்ச வரவு செலவுத் திட்ட விவா­தங்­களில் கலந்து கொள்­ளது தொடர்ச்­சி­யாக வெ ளிநாட்டில் தங்­கி­யி­ருக்­கின்ற அதே­வேளை மனுஷ நாண­யக்­கார எம்.பி.யும் இவ்­வாறு விவா­தங்­களில் கலந்து கொள்­வதை தவிர்த்து வரு­கிறார். அத்­துடன் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் சென­வி­ரத்ன அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வா­கவே கருத்­துக்­களை வெ ளியிட்டு வரு­கின்றார்.

நிறை­வேறும்

இரண்டாம் வாசிப்பின் மீதான முத­லா­வது வாக்­கெ­டுப்பின் போது மூன்றில் இரண்டுப் பெரும்­பான்­மையைப் பெற்று பாரா­ளு­மன்­றத்தின் அங்­கீ­கா­ரத்­துடன் வரவு செலவுத் திட்டம் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள நிலையில் இன்று இடம்­பெறும் மூன்றாம் வாசிப்பின் மீதான இறுதி வாக்­கெ­டுப்பின் போதும் பெரும்­பான்மை ஆத­ர­வுடன் சபையின் அங்­கீ­காரம் கிடைக்­கப்­பெற்று வரவு செலவுத் திட்டம் நிறை­வேற்­றப்­படும் என்று நம்­பிக்கை வெ ளியி­டப்­பட்­டுள்­ளது.

இரண்டாம் வாசிப்பின் மீதான முதலாம் வாக்­கெ­டுப்­பின்­போது ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்த பிர­தான எதிர்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், ஜே.வி.பி.யும் அமைச்­சுக்­க­ளுக்­கான ஒதுக்­கீட்டின் மீதான குழு­நிலை விவாத்­தின்­போது கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளையும் எதிர்ப்­புக்­க­ளையும் வெ ளியிட்டு வந்­தன. இந்­நி­லையில் இன்று மேற்­கொள்­ளப்­படும் வாக்­கெ­டுப்­பின்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், ஜே.வி.பி.யும் எடுக்­க­வுள்ள தீர்­மானம் முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக அமைந்­துள்­ளது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்கள் சிலர் கடு­மை­யான விமர்சனங்களை முன்வைத்து வருகின்ற நிலையில் அவர்கள் இவ்வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது புறக்கணிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதேபோன்று முதலாவது வாக்கெடுப்பின் போது சபையில் சமூகமளிக்காது புறக்கணித்திருந்த முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இன்றைய வாக்கெடுப்பின் போதும் சபையை புறக்கணிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.a