புதிய அரசியல் யாப்பு : பொதுமக்களிடம் கருத்துப் பெற நடவடிக்கை
புதிய அரசியல் யாப்பு தொடர்பாக நாடு பூராகவும் சென்று மக்கள் கருத்துக்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக 21 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுடுள்ளது. குறித்த குழுவில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள் உட்பட கல்வியாளர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். இவர்கள் நாடு பூராகவும் சென்று புதிய அரசியல் யாப்பு தொடர்பான மக்கள் கருத்துக்களை பெற்று அவற்றை அறிக்கைப்படுத்தி பாராளுமன்றில் சமர்பிப்பார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்றின் மூலம் புதிய அறையால் யாப்பு தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.