Breaking News

புலிகளுடனான ஒப்பந்தம் - மறுக்கிறார் மகிந்த

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்ற விடயத்தை தன்னிடம் கேட்க வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவிடமே வினவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாரிய நிதிமோசடிகள் தொடர்பில் விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் நேற்று வியாழக்கிழமை முன்னிலையானார். சாட்சியமளித்த அவர் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவ்வாறு குறிப்பிட்டார். அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினரும் தனது புதல்வருமான நாமல் ராஜபக்ச சம்பந்தப்பட்டிருக்கும் விடயங்கள் தொடர்பில் அவரிடமே சென்று கேள்வி எழுப்புமாறு மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.