பசில் ராஜபக்சவிற்கு நீதிமன்ற அழைப்பாணை!
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதி ஆஜராகுமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று அறிவித்தல் விடுத்துள்ளது.
அவருடன் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கிங்ஸ்லி ரணவக்கவையும் மன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியுள்ளது.திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற 29 மில்லியன் ரூபாய்கள் நிதிமோசடி தொடர்பிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்சவின் மீது சட்டமா அதிபர் கொழும்பு மேல்நீதிமன்றில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.இதன் அடிப்படையிலேயே அவருக்கு ஆஜர் அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.