இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு ஜெயலலிதா கோரிக்கை
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று வியாழக்கிழமை அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கமைய இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 41 இந்திய மீனவர்களையும் அவர்களின் 56 படகுகளையும் விடுவிக்க நடவக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் தமிழக மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் கோரிக்கை விடுத்துள்ளார்.