கிளிநொச்சியில் வீட்டு அலுமாரியில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு
கிளிநொச்சியில் பிறந்த குழந்தையை தாயொருவர் கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த 23 வயதான பெண்ணொருவருக்கு நேற்று காலை குழந்தை பிறந்துள்ளது.
பிறந்த குழந்தையை பொலித்தீன் பை ஒன்றில் வைத்து அலுமாரியினுள் வைத்து பூட்டி வைத்தவேளை, குழந்தை இறந்துள்ளது. இதனையடுத்து குறித்த தாய் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றவேளையே மாட்டிக்கொண்டுள்ளார்.
குறித்த தாய் திருமணம் ஆகாதவர் எனவும் கிளிநொச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.