Breaking News

நாட்டின் தற்போதைய நிலைக்கு காரணம் கூறுகிறார் மஹிந்த

நாட்டின் தற்போதை அமைதி நிலை, வடக்கிற்கு செல்ல முடிந்துள்ளது, தனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிந்துள்ளது போன்ற அனைத்துக்கும் காரணம் தான் நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்ததாகும் என்று முன்னாள் ஷனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

நேற்று விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்த மஹிந்த ராஜபக்‌ஷ, ஊடகவியலாளர்களிடம் பேசும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா நேற்று முன்தினம் தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் விதமாகவே மஹிந்த ராஜபக்‌ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மஹிந்த ராஜபக்‌ஷ மேலும் 15 வருடங்களுக்கு அதிகாரத்தில் இருந்தால் நாட்டின் தலைவராக நாமல் நினைத்திருந்ததாக டிலான் பெரேரா தெரிவித்திருந்தார். 

இதற்கு பதில் வழங்கிய மஹிந்த ராஜபக்‌ஷ, அது தொடர்பில் நாமல் ராஜபக்‌ஷவிடம் கேட்டுக் கொள்ளுமாறு குறிப்பிட்டார்.