கிளிநொச்சியில் பாதுகாப்பான புகையிரத கடவையை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்
கிளிநொச்சியில் பாதுகாப்பான புகையிரத கடவைகளை அமைத்து தருமாறு கோரி இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது. முறுகண்டி முதல் முகமாலை வரை கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைக்குள் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுவதால் குறித்த பகுதியில் 219 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு பாதுகாப்பற்ற புகையிரத கடவையை பாதுகாப்பு கடவைகளாக மாற்ற கோரி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. நிறைவில் புகையிரத திணைக்கள அதிகாரி மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு மகஜரும் கையளிக்கப்பட்ருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வார்ப்பாட்டத்தில் முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.