17 தொழிற்சங்கங்கள் இன்று பட்ஜட்டுக்கு எதிராக போராட்டம்
இதுவரை முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் காணப்படும் சலுகை நீக்கங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச துறையைச் சேர்ந்த வைத்தியர்கள், பொறியியலாளர்கள், நிருவாக சேவை ஊழியர்கள், அளவையியலாளர்கள், கணக்காய்வாளர்கள் ஆகியோரின் சங்கங்கள் உட்பட 17 தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று மாலை தீர்மானம் எடுக்கப்படும் என சில சங்கங்கள் அறிவித்துள்ளன.