Breaking News

பிரதமருடன் பேச்சு தோல்வி! 15ம் திகதி திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொழிற்சங்க பிணக்குகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது


இதனையடுத்து எதிர்வரும் 15ம் திகதியன்று நாடாளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக அரச மற்றும் மற்றும் தனியார் தொழிற்சங்க சம்மேளனம் எச்சரித்துள்ளது

2016ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச பணியாளர்களுக்கும் தனியாருக்கும் உரிய நன்மைகள் கிடைக்கவில்லை என்று சம்மேளனத்தின் அழைப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.இது குறித்து நேற்று பிரதமருடன் அலரி மாளிகையில் பேச்சு நடத்திய போதும் எவ்வித இணக்கமும் ஏற்படவில்லை.இதனையடுத்தே தொழிற்சங்க நடவடிக்கை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.