Breaking News

வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக 150 தொழிற் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம்

தேசிய அரசாங்கம் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 150 தொழிற் சங்கங்கள் எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச ஊழியர்களுக்கு சம்பளவு உயர்வு வழங்கப்படவில்லை என்றும் சாதாரண மக்களுக்கு மானியங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

அதேவேளை எதிர்வரும் 15ஆம் திகதி அரச ஊழியர்கள் அனைவரும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தனியார் பேரூந்து சங்கம் அந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் என்றும் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கு உடனடியாக 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் தொடர்ச்சியாக ஆர்;ப்பாட்டங்களை முன்னெடுப்பது குறித்து தொழிற் சங்கங்கள் ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.

தனியார் தொழிற் சங்கங்களும் இந்த போராட்டத்தில் இணைந்து கொள்ளும் என்றும் சாதாரண மக்களை பாதிக்கும் வரிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுகள் போன்றவற்றை கண்டித்து சில பொது அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் ஜோசப் ஜ்ராலின் குறிப்பிட்டார்.