Breaking News

வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை

வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களின் காணிகளை மீள கையளிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். 

இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், புதிய அரசாங்கம் ஒரு சில ஏக்கர் காணிகளை விடுவித்திருந்தாலும் பெரும்பாலான பொது மக்களின் காணிகள் இராணுவத்தினர் வசமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சபையில் குறிப்பு ஒன்றை காட்டிய மாவை சேனாதிராஜா, யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் வடக்கில் சிங்கள மக்கள் சட்ட ரீதியாக காணிகளுக்கு உரிமையாளர்களாக இருக்கும் பட்சத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்போவது இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் கடந்த அரசாங்கம் சிங்கள மக்களை சட்டவிரோதமாக தமிழ் மக்களின் காணிகளில் குடியேற்றியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.