சுவாமிநாதனுக்கு மாவை எச்சரிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடும் முயற்சியினாலே அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மீள்குடியேற்ற அமைச்சராக நியமிக்கப்பட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
நாடளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற காணி, சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற, காணி விவகாரத்தில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தன்னிச்சையாகச் செயற்படுவதாகக் குறிப்பிட்ட மாவை சேனாதிராஜா, இதுகுறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறையிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சர்வதேசத்திடமும் முறையிடுவோம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.