சரத் பொன்சேகாவிற்கு அமெரிக்கா வீசா மறுப்பு
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவிற்கு அமெரிக்கா வீசா மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வசித்து வரும் இரண்டு மகள்களையும் பார்வையிடுவதற்காக சரத் பொன்சேகா அமெரிக்கா செல்ல விண்ணப்பம் செய்துள்ளார்.
ஜெனீவா மனித உரிமைப் பேரவையின் போர்க் குற்றச் செயல் விசாரணை அறிக்கையில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களின் வரிசையில் சரத் பொன்சேகாவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சரத்பொன்சேகாவின் இளைய மகள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் உறவினர் ஒருவரை திருமணம் செய்துள்ளதுடன், மூத்த மகள் ஏர்னஸ்ட் என்ட் யங் கணக்காய்வு நிறுவனத்தின் ஆலோசகரான இஸ்டியன் டி சேரம் என்பவரை திருமணம் செய்துள்ளார்.