Breaking News

நாளை நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் - வரலாற்றில் முதல் தடவை

வரலாற்றில் முதல் தடவையாக நாடு தழுவிய அரச, தனியார் வேலை நிறுத்தமொன்று இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழில்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இன்று நள்ளிரவு நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலை நிறுத்தத்தில் தனியார் பஸ் சங்கங்களும், ரயில்வே திணைக்களமும் இணைந்து கொள்வதாகவும், ஏனைய அரச மற்றும் தனியார் பகுதிகளின் ஊழியர்கள் நாளை (15) காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1980 ஜூலை இலங்கையில் இடம்பெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரச தொழிற்சங்கங்கள் மட்டுமே பங்கெடுத்தன. ஆனால், இன்று நள்ளிரவு ஆரம்பமாகும் போராட்டத்தில் தனியார் மற்றும் வங்கி ஊழியர்களும் இணைந்துள்ளதாகவும் இது இலங்கை வரலாற்றில் முதல் தடவை எனவும் அச்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.