Breaking News

மஹிந்தவுக்கு என்னைவிட சலுகை அதிகம் – மைத்திரி கடும் விசனம்

ஒரு நாட்டில் இரண்டு ஜனாதிபதிகள் இருக்க முடியாது. நான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகளவான வாகனங்களையும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் பயன்படுத்தி வருகின்றார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதியான நான் பயன்படுத்துவதை விட அதிகமான வாகனங்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்கள் மட்டத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தின் போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை மற்றும் வாகனங்களின் எண்ணிகை தொடர்பான அறிக்கையொன்றை நிதி அமைச்சர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.