புகை பரிசோதனைக் கட்டணம் குறைக்கப்படாவிடின் 14 முதல் பஸ்கள் ஓடாது
வரவு செலவுத் திட்டத்தில் வாகனங்களின் புகை பரிசோதனை கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வாகனங்களில் கறுப்பு நிறக் கொடியை பறக்கவிட தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்க சம்மேளனத்தின் செயலாளர் அஞ்ஜன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை நேற்று ஆரம்பமானது. இது எதிர்வரும் 7 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் அதிகரித்த புகை பரிசோதனைக் கட்டணத்தை மீள்பரிசீலனை மேற்கொள்ளாதுவிடின் எதிர்வரும் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் தேசிய ரீதியிலான பஸ்கள் ஓட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.